முதல்வருக்கு கொரோனா - மீண்டு வர கமல், வைரமுத்து வாழ்த்து!!

 
tn

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்றுமுன்தினம்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  உடற்சோர்வு சற்று இருந்ததன் காரணமாக  பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், இதன் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். முதல்வர் ஸ்டாலின் கொரோனாவில் இருந்து மீண்டு வர பலரும் தங்கள் வாழ்த்தினை  கூறி வருகின்றனர்.

stalin

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 

தமிழ்நாட்டு முதலமைச்சரின்
உடல் நலத்தோடு
தமிழர் நலன்
சம்பந்தப்பட்டிருக்கிறது

அவர்
விரைந்து நலமுறவும்
தொடர்ந்து பலம் பெறவும்
புயலாய் வலம் வரவும்
செயலால் வளம் தரவும்
வாழ்த்துகிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், "கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்குத் திரும்பவேண்டுமென விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.