ஓபிஎஸ்க்கு கொரோனா?மருத்துவமனையில் அனுமதி?

 
o

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாமக நிறுவனர் ராமாதாஸ் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவ்விருவரும் விரைந்து குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.  அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்றும்,  இதற்காக அவர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படலாம் என்றும்  ஓபிஎஸ் வட்டாரத்தில் தகவல் பரவுகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் எதிரொலியால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  இத்தனை போலீஸ் பாதுகாப்பு அவருக்கு எதற்கு? வாபஸ் வாங்க வேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர் ஆதி ராஜாராம் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

ஓ
 
இதற்கிடையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டிருக்கும்  சீலை  அகற்ற வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த மனு மீது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அறிக்கையில்,  இன்னமும் இரு தரப்பினர் இடையே எந்த சமாதானமும் ஏற்படவில்லை.   அப்படி இருக்கும்போது சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மீண்டும் பிரச்சனை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

ஓபிஎஸ் ஆதரவாளர்களை எடப்பாடி அதிமுகவில் இருந்து நீக்கி வரும் நிலையில்,  பதிலுக்கு எடப்பாடி உள்பட அவரது ஆதரவாளர்களை நீக்கம் செய்து உத்தரவிட்டு வருகிறார் ஓபிஎஸ்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைப்பதற்காக வரும் 28ஆம் தேதி அன்று பிரதமர் மோடி சென்னை வருகிறார்.   பிரதமரின் சென்னை பயணத்தின் போது அவரை நேரில் சந்தித்து பேச ஓபிஎஸ் அனுமதி கேட்டு இருக்கிறார். 

இந்த நிலையில்,  ஓபிஎஸ்க்கு கொரொனா என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார் என்றும் தகவல் பரவுகிறது.