கொரோனா பூஸ்டர் டோஸ் போடாதவர்களுக்கு போட்டதாக குறுஞ்செய்தி!

 
booster

சீர்காழி தாலுகாவில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடாமல் போட்டதாக குறுச்செய்தி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் சேகர், சத்யநாராயணன், கண்ணன், வேதநாயகி உள்ளிட்ட பல பேருக்கு பூஸ்டர் டோஸ்  போடாமலேயே  போட்டதாக வந்த குறுஞ்செய்தியால் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் திருவெண்காடு அரசு மருத்துவமனை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் செலுத்தி உள்ளதாகவும் அவர்களுக்கு வந்திருந்த செல் நம்பருக்கு குறுஞ்செய்தியின் அடிப்படையில் அவர்களுக்கு உண்டான சான்றிதழை பதிவிறக்கம் செய்து பார்த்தால் அதிலும் பூஸ்டர் டோஸ் செலுத்தியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.