திருமா விழாவில் சர்ச்சை பேச்சு - திண்டுக்கல் லியோனியை கைது செய்யக்கோரி போலீசில் புகார்

 
li


திண்டுக்கல் ஐ லியோனியை கைது செய்ய வேண்டும் என்று போலீசில் புகார் அளித்து உள்ளனர் பாரத் இந்து முன்னணி அமைப்பினர் . அவர் வகித்து வரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் அறுபதாவது பிறந்த நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது.  இந்த விழாவில் பட்டிமன்ற பேச்சாளரும்,  தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு பேசினார்.   அவர் தனது பேச்சில் 5 சதவீதம் திருமாவளவனை வாழ்த்தி பேசினார்.   மிச்சம் 95 சதவிகிதம் இந்துக்களையும் , இந்து மத கடவுள்களையும் , பாஜகவையும் கடுமையாக தாக்கி பேசினார்.

ti

இந்த நிலையில்,   சென்னை பாரிமுனையில் இயங்கி வரும் பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் டில்லி பாபு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.   அந்த புகாரில் சென்னை  கலைவாணர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 60-வது பிறந்தநாள் விழாவில் பேசிய லியோனி இந்துக்கள் யாகம் வளர்க்கும் முறை பற்றியும் கல்லை கடவுளாக வணங்குகிறார்கள் என்றும்,  சாமி ஊர்வலம் குறித்தும் மிகவும் அவதூறாக பேசியுள்ளார்.  

ஒரு சிலர் பிறந்த நாள் விழாவில் ஐயர்களை வைத்து யாகம் நடத்துவான். அந்த யாகத்தில் சுக்லாம் பரதரம் விஷ்ணு சசி வரணம் என்று சொல்லிவிட்டு பூவை எடுத்து போடு என்று சொல்லி,  அரை மூட்டை விறகை வைத்துக் கொண்டு எடுத்து போடுங்கோ சமர்ப்ப யாமி சமர்ப்ப யாமி என்று சொல்லச்சொல்ல, எனக்கு 60 வயது ஏன் வந்தது என்று அவர் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார் என்று யாகம் வளர்ப்பதை கேவலப்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.  

bh

ஒருவன் கோவிலில் பொங்கல் வாங்கி தின்றுவிட்டு கையை துடைக்க துணி எடுத்து வரவில்லை என்று சுவற்றில் துடைத்து விட்டு கையை முகர்ந்து பார்த்து உள்ளார். அதை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்து அங்கே ஏதோ ஒரு சாமி இருக்குடா வணங்குகிறான்.   நாம எல்லாரும் விட்டுட்டோமே என்று அனைவரும் வரிசையில் நின்று அந்த இடத்தை தொட்டுத் தொட்டு கும்பிடுவான். இரண்டு மாதம் கழித்து ஆயிரம் பேர் தொட்டு கும்பிடுவார்கள். ஒரு வருடம் கழித்து அந்த இடத்தில் கும்பாபிஷேகமே நடக்கும். ஒருவன் பொங்கல் தின்றுவிட்டு கையை  துடைத்த இடத்தையே சாமி ஆக்கிட்டானே என்று இந்துக்கள் மனதை மிகவும் வேதனை அடையும் அளவிற்கு பேசியுள்ளார்.

 இந்துக்களின் யாகம் மிகவும் புனிதமானது சக்தி வாய்ந்தது என்று இந்துக்கள் கருதுகின்றனர்.  கல்லையும் கடவுளாக வணங்கும் ஒரே மரம் இந்து மதம் தான் . அப்படி  இருக்கும்போது இந்துக்களின் மனதை இந்துக்களின் சடங்குகளை கொச்சைப்படுத்தி இந்துக்களின் மனதை புண்படுத்துகின்ற வகையில் பேசி இருக்கும் லியோனி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும்.  அவர் தற்போது வகித்து வரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.