தொடரும் மழை.. 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

 
பள்ளி விடுமுறை
 

தொடர் கனமழையினால்  தமிழகத்தில் இன்று  8  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அத்துடன்   மூன்று மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டம் முதல் வடதமிழகம் வரை நேற்று முன்தினம் மாலையில் தொடங்கி நேற்று பகல் முழுவதும் மழை பெய்தது. இன்னும் சில இடங்களில் மழை தொடர்ந்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.    மேலும், வருகிற 6 ஆம் தேதி வரை வட மாவட்டங்களில்  மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை  

ஆகையால்,  சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம் ,காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.