தொடரும் தேர் விபத்து.. அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் - அண்ணாமலை கண்டனம்

 
annamalai


 அண்மைக்காலமாக தமிழகத்தில்  தொடர்ந்து நடைபெறும்  தேர் விபத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை  அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என பாஜக மாநிலத் தலைவர்  அண்னாமலை கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து : 10க்கும் மேற்பட்டோர் காயம்..

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  “இன்று காலை புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் பிரஹதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்ற செய்தி கவலை அளிக்கிறது.  தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று வருகிறது.இன்று புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

 தொடரும் தேர் விபத்து.. அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் - அண்ணாமலை கண்டனம்

தமிழக பாஜக  சார்பாக மாவட்ட தலைவர் திரு. செல்வன் அழகப்பன் அவர்கள் காயமடைந்த சகோதர சகோதரிகளை நேரில் சந்தித்துள்ளார்.  அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கும் இந்து சமய அறநிலையதுறையின் திறனற்ற செயற்பட்டாலும் இது போன்ற தேர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.  காயமடைந்த மக்களுக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் உடனடியாக  அரசு வழங்க வேண்டும் என்பது பாஜகவின்  கோரிக்கை.” என்று குறிப்பிட்டுள்ளார்.