சவுக்கு சங்கர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற அனுமதி மறுப்பு!

 
tn

யூட்யூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.  அத்துடன் நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கி உள்ளது என்று சவுக்கு சங்கர் கூறியிருந்தார்.  இதன் காரணமாக சவுக்கு சங்கர் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது.

இது குறித்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கப்பட்டு வந்த நிலையில் நீதித்துறை குறித்து அவதூறாக பேட்டி கொடுத்த உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்று நீதிபதிகள் சவுக்கு சங்கரிடம் கேள்வி எழுப்பினர்.  கடந்த செப்டம்பர் 1ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான அவர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.   இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த 8ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

ttn

மீண்டும் இந்த வழக்கு குறித்து விசாரணைக்கு வந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தேவையான குற்றசாட்டை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.  ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் , ஒட்டுமொத்த நீதித்துறை முழுவதும் ஊழல் சிக்கி உள்ளது என்று பேட்டி கொடுத்தீர்கள்.  பல பேட்டி மற்றும் பதிவுகளில் சென்னை உயர்நீதிமன்றம் சில நீதிபதிகளின் பரம்பரை சொத்து என பாதித்து செயல்படுகின்றனர்.  சில நீதிபதிகளுக்கு ஒன்றுகூட தெரியவில்லை.  ஒரு வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகிறார். அவரே தீர்ப்பையும் எழுதுகிறார் என நீதித்துறை குறித்து நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பேசி உள்ளீர்கள் என்று சவுக்கு சங்கர் மீதான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

madurai high court

 அப்போது இது குறித்து பதிலளிக்க கால அவகாசம் சவுக்கு சங்கர் தரப்பில் கூறப்பட்ட நிலையில் பேட்டி கொடுத்த உங்களுக்கு தெரியாதா? நீங்களே அறிந்து கொண்டு தான் பேசுனீர்களா? மறந்து விட்டீர்களா என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஊடகங்களில்,  சமூக ஊடகங்களில் பதிவு செய்ய மாட்டேன்  என்று உறுதி கூறுங்கள் என நீதிபதிகள் கேட்டு நிலையில்,  இது குறித்து பேட்டியளிக்க மாட்டேன் என்று கூற இயலாது என சவுக்கு சங்கர் கூறினார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் சவுக்கு சங்கரின் நீதிமன்ற அவமதிப்பு விசாரணை முடிவுற்று  தீர்ப்பு கொடுக்கப்பட உள்ள நிலையில்  சவுக்கு சங்கர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற அனுமதி மறுத்து  அவரைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .