ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் - அனைத்து மாவட்டங்களிலும் இன்று வெளியீடு

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக மயிலாப்பூரில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெறுகிறது என்று அறிவித்துள்ளனர் அதிகாரிகள்.
வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள் குறைகளை சரி செய்கின்ற நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு பணி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆறு கோடியே 21 லட்சத்து 22 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3. 15 கோடி பேர் வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
ஆதார் இணைப்பு திட்டத்தை நிறைவு செய்யவும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் பணிகளை மேற்கொள்ளவும் இம்மாதம் சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு எடுத்து இருக்கிறது. இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு கடிதம் எழுதி இருக்கிறார்.
துணை, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த 25ஆம் தேதி தொடங்கி கடந்த ஏழாம் தேதியுடன் நிறைவு பெற்றது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வெளியிடப்படுகிறது.
இந்த நாளின் முக்கியத்துவத்தை குறிக்கின்ற வகையில் இந்திய தேர்தல் ஆணையம் முறையான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு என்கிற விழிப்புணர்வு பேரணியை நடத்த முடிவு செய்திருக்கிறது. சென்னையில் இன்று காலை ஒன்பது மணிக்கு மயிலாப்பூரில் பேரணி தொடங்குகிறது.
சத்திய பிரத சாகு கொடியசைத்து இந்த பேரணியை தொடங்கி வைக்கிறார். மைலாப்பூரின் முக்கிய வீதிகள் வழியாக செல்லும் இந்த பேரணியில் பொதுமக்கள் வாக்களிப்பன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.