தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஐ.ஐ.டி ஆராய்ச்சி மாணவி நேரில் வாக்குமூலம்

 
ii

 சென்னை ஐஐடியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து உள்ளார் .

சென்னை ஐஐடியில் பட்டியிலின பெண் பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை,  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹெல்டர் தலைமையில்  நடைப்பெற்று வருகிறது.  தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும் இங்கே விசாரணை நடந்து வருகிறது.

iit

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் கண்ணன் மற்றும்  மாநில மனித உரிமை துறை கூடுதல் காவல் துறை இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் இந்த விசாரணையில் நேரில் அஜராகி விளக்கமளித்துள்ளனர்.

விசாரணை கைதி சந்தேக மரணம் அடைந்ததில் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாகவும், மரணத்திற்கு பின்னர் காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான ஆவணங்களை ஆணையத்திடம் காவல் ஆணையர் முன் வைத்துள்ளனர்.

இதையடுத்து,   சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சி மாணவி கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளனர். 

இந்த நிலையில் சென்னை ஐஐடியில் பட்டியிலினப் பெண் பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்,   பாதிக்கப்பட்ட பெண் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.