"அரசு பேருந்தில் நடத்துநரை அடித்துக் கொன்ற பயணி"- அதிர்ச்சி தரும் சம்பவம்!!

 
murder

சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணி தாக்கி நடத்துநர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Death

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருச்சி சென்ற அரசு பேருந்து நடத்துநர் பெருமாள் (54) என்பவரை அதே பேருந்தில் பயணம் செய்த அடையாளம் தெரியாத நபர் அடித்துக் கொலை செய்துள்ளார்.  சென்னை - விழுப்புரம் பேருந்து பாதையில் பயணித்த பயணி ஒருவருக்கும் நடத்துநருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது.  மது போதையில் இருந்த பயணி தாக்கியதில் நடத்துனர் பெருமாள் படுகாயமடைந்தார். 

death

இதை தொடர்ந்து  படுகாயமடைந்த நடத்துநர் பெருமாள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.  உயிரிழந்த நடத்துநர் பெருமாள் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் என்பதும் , அவர் விழுப்புரம் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது  இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்துநரை அடித்துக் கொன்று விட்டு பேருந்தில் இருந்து தப்பி ஓடியபோது பயணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.