"1 முதல் 9ம் வகுப்பு வரை கட்டாயம் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும்" - பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்!!

 
dpi building

1 முதல் 9-ம் வகுப்பு வரை கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

schools open

கொரோனா  காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆல் பாஸ் அளிக்கப்பட்டு வந்தது.  இந்த ஆண்டு கொரோனா குறைந்துள்ளதால் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.  குறிப்பாக தமிழகத்தில் வருகிற மே 4ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.  இதுவொருபுறம் இருந்தாலும் வெயிலின் தாக்கம் காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை அனைவரும்  தேர்ச்சி என்று அறிவித்து விரைவில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

school opening

இந்த சூழலில் புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ஆம் தேதிக்குள் மாணவர்கள் தேர்ச்சி பட்டியலை கண்காணிப்பு அதிகாரியிடம் பள்ளி நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சூழ்நிலை தமிழகத்தில் நிலவுமா?  என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கட்டாயம்  ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இறுதித் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.  புதுச்சேரியை போல ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் நாட்டிலும் அனைவருக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி என்று வெளியான செய்திக்கு பள்ளி கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இறுதி தேர்வு திட்டமிட்டபடி மே 6ஆம் தேதி தொடங்கும். அனைவரும் ஆல் பாஸ் என்று வெளியான செய்தி தவறானது என்றும் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.