சென்னையில் இன்று ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்வதற்கான குறைதீர் முகாம்!!

 
Ration shop

சென்னையில் இன்று ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்வதற்கான குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

ration shop

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று  நடைபெறுகிறது.  குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் ,பெயர் நீக்கம், சேர்த்தல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல் உள்ளிட்ட பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் தேவைகளை உறுதி செய்யும் வகையில் இன்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.  தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது.  குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு மே மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் இன்று 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறுகிறது.

ration shop

 இன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை குறைதீர் முகாம் நடைபெறுகிறது.  இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.