வெள்ளலூர் பேருந்து நிலைய டெண்டரில் முறைகேடு- ஈபிஎஸ், எஸ்பி வேலுமணியிடம் விசாரணை நடத்துக: லஞ்ச ஒழிப்புத்துறை

 
edappadi palanisamy sp velumani

கோவையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வெள்ளலூர் முந்தைய அதிமுக ஆட்சியாளர்களால் தேர்வு செய்யப்பட்டன. வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க உகந்த இடம் இது இல்லை என்றும் முறையான திட்டமிடல் இல்லை என்கிற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணி முடிவடையுமா பேருந்து நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றன. 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு :  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பிறகு திடீர் ஆலோசனை – Update News 360 ...

இந்த நிலையில் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்யக்கூடாது என்று அதிமுக தரப்பில் தெரிவித்து இருக்கின்றனர். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். பெரும் சர்ச்சையான வெள்ளலூர் பேருந்து நிலைய விவகாரம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த திட்டமே முன்னாள் ஆட்சியாளர்களின் சுயநலத்துக்காக கொண்டுவரப்பட்டதாக புகார் எழுந்திருக்கின்றன. ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசார், ஐஜி, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் தந்திருக்கின்றார். அந்த புகாரியில் 65 ஏக்கர் பரப்பளவில் 168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய டெண்டரில் முறைகேடு நடந்துருப்பதாகவும், பொதுமக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்த கோரிக்கை விடுத்திருக்கின்றார். 

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரேஸ்கோஸ் ரகுநாத், வெள்ளலூர் பேருந்து நிலையம் தேர்வு செய்யப்பட்ட பொழுது அது ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு உகந்த இடம் இல்லை என்று மத்திய அரசாங்கம் புறம் தள்ளியதாக தெரிவித்து இருக்கின்றார். ஆனாலும் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வெள்ளலூர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் ரியல் எஸ்டேட்டுக்காக நிலங்களை வாங்கி இருப்பதாகவும் அதற்கான மதிப்பு கூட்டும் விதமாக வெள்ளலூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்து இருக்கின்றார். இந்த நிலையில் வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான டெண்டரும் வேலுமணியின் சகாக்களுக்கு விடப்பட்டதாகவும் 20 சதவீத பணிகளே முடிந்திருக்கின்ற நிலையில் 40 சதவிகித பணிகளுக்கான நிதியை கையாடல் செய்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். 

168 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் 100 கோடி ரூபாய் அளவில் கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டியிருக்கின்ற ரேஸ்கோர்ஸ் ரகுநாத் இது குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னாள் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உள்ளிட்ட அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை தெரிவித்து இருக்கின்றார். மாநகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் புறநகரான வெள்ளலூருக்கு பயணித்து பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியாது என்றும் வெள்ளலூரில் அமைந்திருக்கின்ற குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதனால் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை அமைப்பதில் எந்த பயன் இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.