மத்திய அரசின் எஸ்எஸ்சி தேர்வை தமிழிலும் எழுதலாம்!!

 
police exam

 மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

exam

விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள  மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் பிப்ரவரி 17ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழிலும் இத்தேர்வு நடைபெறுகிறது. கணினி மூலம் இரு கட்டங்களாக நடக்கும் இந்த தேர்வுக்கு   https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம்.

Computer base Exam

பிப். 23, 24-ம் தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான கணினி வழித்தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. வழக்கமாக எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. மாநில மொழிகளிலும் எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டும்என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழ், இந்தி, ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வானது நடைபெறுகிறது.