தொடரும் ஏட்டிக்குப் போட்டி! எங்கே போய் முடியப்போகிறது?

 
gg


 எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை பறித்து அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் . உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தகுதி நீக்கம் செய்து அவரை அதிமுகவை வெற்றி வெளியேற்றி விட்டதாக அறிவிக்கப்பட்டது ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கம் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் என்று ஓபிஎஸ் அறிவித்தார் .  இந்த ஏட்டிக்குப் போட்டியால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.  அதுவே தொடர்கின்றபோது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது கட்சியினருக்கு.

l

ஓ. பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவியை பறித்து விட்டதால் அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியில் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.    அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் நியமனம் செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக வெளியிட்ட அறிவிப்பே அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்படுகிறார் என்ற அறிவிப்புதான்.  அந்த அறிவிப்பில் பொதுச்செயலாளர் ஆன பின்னர் எடப்பாடி பழனிச்சாமி போட்ட முதல் கையெழுத்து அதுதான்.  

 இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுகவில் வங்கி கணக்கு வைத்திருக்கும் கரூர் வைசியா வங்கி மேலாளருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.   அந்த கடிதத்தில்,   திண்டுக்கல் சீனிவாசன் தான் இனி கட்சியின் புதிய பொருளாளர் என்று அதிமுக கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருக்கிறார்.   அதனால் ஓ . பன்னீர்செல்வம் இனி அதிமுகவில் வங்கு கணக்கில் தலையிட்டால் அவர் மீதும் வங்கி மீதும்  சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்று எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்திருக்கிறார். 

oe

 இதை அடுத்து ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் வங்கி கணக்கு வைத்திருக்கும் கரூர் வைசியா வங்கி மேலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.  அந்த கடிதத்தில்,   இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டத்தின்படி இன்று வரை  நான் தான் ஒருங்கிணைப்பாளர் . நான்தான் பொருளாளர்.  நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும்போது என்னை கேட்காமல் எந்தவித வரவு செலவு கணக்குகளையும் மேற்கொள்ளக்கூடாது.  அப்படி மீறினால் வங்கி மீது நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்து இருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி,  ஓ. பன்னீர்செல்வம் இருவரும் இப்படி அடுத்தடுத்து கடிதங்களை அனுப்பி இருப்பதால் குழப்பத்தில் இருக்கிறது கரூர் வைசியா வங்கி.  இந்த ஏட்டிக்குப் போட்டி போதாது என்று எடப்பாடி அணி சார்பில் நேற்று பொதுக்குழு நடந்திருக்கும் நிலையில்,   ஓபிஎஸ் அணி சார்பில் பொதுக் குழு நடத்தி அதில் தீர்மானங்களை கொண்டு வரவும்,  புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று தகவல்.   இந்த ஏட்டிக்கு போட்டி எங்கே போய் முடிய போகிறதோ என்று கவலையுடன் இருக்கின்றனர் கட்சியினர்.