காமன்வெல்த் போட்டி : பதக்கம் வென்ற வீரர்களுக்கு சசிகலா வாழ்த்து..

 
sasikala

காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்கும் போட்டியில்  பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் இருவருக்கும் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

common wealth

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.  இந்தில் இந்தியா சார்பில் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் சங்கேத் மகாதேவ் வெள்ளி பதக்கமும், குருராஜா வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், “பர்மிங்காமில் நடைபெறும் 22வது காமன்வெல்த் போட்டியில் 55 கிலோ பளு தூக்கும் பிரிவில் இந்திய வீரர் சங்கெத் மகாதேவ் சர்கர்  வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளதற்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

காமன்வெல்த் போட்டி

அதேபோன்று 61 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர் குருராஜா பூஜாரி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதற்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய காமன்வெல்த் போட்டியில் நம் இந்திய தேசம் தனது வெற்றி கணக்கை இன்று தொடங்கியிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் கலந்து கொண்டுள்ள நம் வீரர்கள் அனைவரும் வெற்றிவாகை சூடி, இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.