போக்குவரத்து கழகங்களுக்கு பொதுவான நிலையானையை மாற்றம் செய்வது குறித்து ஆராய குழு!!

 
BUS

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பொதுவான நிலையானையை மாற்றம் செய்வது குறித்து ஆராய குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விதிமுறைகளை மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. உயரதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவில் LPF, CITU, TTSF தொழிற்சங்க பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விதிமுறைகளை மாற்றிவிட்டு ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

govt

தலைவர் அலுவலகத்தின் குறிப்பினை நன்கு ஆய்வுசெய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் நடைமுறையில் உள்ள பொதுவான நிலையாணையில் மாற்றம் செய்வதற்காக போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை கொண்ட பின்வரும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து அரசு இதன் வழி ஆணையிடுகிறது. 

1) உறுப்பினர்-செயலாளர் மற்றும் கூட்டுநர் / மேலாண் இயக்குநர், 14-வது
ஊதிய ஒப்பந்தக்குழு, மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை .
 2) மேலாண் இயக்குநர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை . 
3) மேலாண் இயக்குநர், சாலை போக்குவரத்துக் கழகம், சென்னை . 
4) தலைமை நிதி அலுவலர், மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை . 5) முதுநிலை துணை மேலாளர் (மனிதவள மேம்பாடு), தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம், கும்பகோணம். தொழிற்சங்க பிரதிநிதிகள்

ttn

1) தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை (LPF) 2) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம் (CITU) 3) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் சம்மேளனம் (TTSF)
4. மேற்கண்ட இக்குழு பொதுவான நிலையாணையில் அடிப்படை ஷரத்துக்களில் மாற்றம் செய்யாமல், ஒரே மாதிரியான நிலையாணை (uniform Standing Order) தயார் செய்து அளிக்குமாறு அரசு ஆணையிடுகிறது.