உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க குழு அமைப்பு..

 
supreme court

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைத்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்மையில் மும்பையில் நடைபெற்ற  மகாராஷ்டிரா - கோவா வழக்கறிஞர்கள் சங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் என்று அறிவித்தார். முதல் கட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளது என்றும்  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருந்தார்.

நீதிமன்ற தீர்ப்பு

தலைமை நீதிபதியின் இந்த யோசனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட  நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக  உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற  நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், “நாட்டில் தற்போது சட்டங்கள் ஆங்கிலத்தில் உள்ளன.  ஆகையால்  இந்த  சட்டங்களை 99 சதவீத மக்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. மக்கள் தாங்கள் பேசும் மொழியில் சட்டங்களை புரிந்து கொள்வது அவசியம். இதன் ஒரு பகுதியாக  உச்சநீதிமன்ற  தீர்ப்புகளை இந்தி, தமிழ், குஜராத்தி, ஒடியா ஆகிய 4 பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்ய நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், என்.ஐ.டி. தர்மிஸ்தா, ஐ.ஐ.டி. டெல்லியை சேர்ந்த மித்தேஷ் கப்தா, ஏக். ஸ்டெப் பவுண்டேசன் விவேக் ராகவன், அகாமி நிறுவனத்தை சேர்ந்த சுப்ரியா சங்கரன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்” என்று தெரிவித்தார்..