#BREAKING வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது!!

 
tn

வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.96 குறைந்துள்ளது. 

tn

ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர்  விலையும் மாத முதல் நாளிலேயே  உயர்வை சந்தித்து வருகிறது.  எரிவாயு சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என இரண்டு வகையாக உள்ளது.  ஜூலை மாத தொடக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 187 ரூபாய் குறைந்து,  ரூ. 2,186 ஆக விற்பனையாகி வந்த நிலையில்   அதே மாதத்தில் ரூ.8.50 குறைந்து  ரூ.2,177.50 ஆக விற்பனையாகியது. அதேபோல் கடந்த மாதம் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்து, ரூ.2141-க்கு விற்பனையாகி வந்தது.

tn

இந்நிலையில்  வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.96 குறைந்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.96 குறைந்து,  ரூ.2,045க்கு விற்கப்படுகிறது.  வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.1,068.50க்கு விற்பனையாகி வருகிறது.