நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்!!
Thu, 19 Jan 20231674099279825

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் வடிவேலு. மதுரையைச் சேர்ந்த இவரது தாயார் வைத்தீஸ்வரி. தனது மகன் சினிமாவில் எத்தனை பெரிய உயரத்தை எட்டினாலும் இவரது தாய் தொடர்ந்து மதுரையிலேயே வசித்து வருகிறார்.
இந்நிலையில் வடிவேலுவின் தாய் வைத்தீஸ்வரி மதுரை வீரகனுரில் உள்ள இல்லத்தில் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார் .அவருக்கு வயது 87. நடிகர் வடிவேலுவின் தாயார் உயிரிழந்ததை தொடர்ந்து அவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.