கண்டா வரச்சொலுங்க.. கையோடு கூட்டி வாருங்க... கரூர் எம்பியை காணவில்லை!

 
ka

கரூர் எம்பி யை காணவில்லை.   கண்டா வரச் சொல்லுங்க.. கையோடு கூட்டி வாருங்கள் என்கிற வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள்பரபரப்பாகி வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றன.

ji

 கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.  இவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜூடோ யாத்திரையில் பங்கேற்று பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

 தொடர்ந்து கரூரில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் என்று செய்து வந்த ஜோதிமணி,  எதிர்க்கட்சிகளுக்கு விமர்சனங்கள்,  பதிலடிகள் கொடுத்து வந்த ஜோதிமணி தற்போது ராகுல் காந்தி பாதயாத்திரையில் பங்கேற்றிருக்கும் நிலையில் கரூர் எம்பி யை காணவில்லை.  கண்டா வரச் சொல்லுங்க கையோடு கூட்டி வாருங்கள் என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.   இந்த போஸ்டர்களை போட்டோ எடுத்து சிலர் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் . அந்த போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.