விடுமுறை நாளில் லேத் பட்டறையில் வேலை செய்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

 
death

ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரை வேலைக்காக அழைத்து சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்  ரவி என்பவரின் மகன் ஹரிசங்கர். காங்கேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாண்டு பயின்று வந்தார். விடுமுறை தினங்களில் அருகில் உள்ள லேத் பட்டறைக்கு பணிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கம் போல் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வேலைக்காக அவரை அழைத்து சென்றுள்ளார். பின்னர் பிற்பகலில் பணியின் போது மின்சாரம் தாக்கி ஹரிசங்கர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.   

இதுகுறித்து அவரது பெற்றோருக்கும் போலீசாருக்கும் ராஜ்குமார் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த சிவகிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.  ஹரிசங்கர்  உயிரிழப்புக்கு பணியின் போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் உபகரணங்கள் வழங்காமல்  ராஜ்குமார் அஜாக்ரதையாக இருந்தது தான் காரணம் எனக்கூறி அவரை கைது செய்ய கோரி ஹரிசங்கர் உறவினர்கள் சிவகிரி காவல் நிலையம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்புலன்சில் ஏற்றிய மாணவனின் சடலத்தை எடுத்து செல்ல விடாமல்  தடுத்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து ஹரிசங்கரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டத


.