ரயில் முன் பாய்ந்த கல்லூரி மாணவி! உடல் சிதறி பலி

 
சி

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில் முன்பு பாய்ந்து உள்ளார் கல்லூரி மாணவி  நிரோஷா.  சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

 செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிரோஷா.   20 வயதான இந்த இளம்பெண் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ். ஆர். எம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படித்து வந்திருக்கிறார். 

ன்

 வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திற்கு சென்று இருக்கிறார் நிரோஷா.  அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் வந்த போது அந்த ரயில் முன் பாய்ந்து இருக்கிறார்.  இதில் நிரோஷா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

 தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிரொஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   அதன் பின்னர் பெற்றோருக்கு விவரம் தெரியவந்ததை அடுத்து அவர்கள் கதறி அழுதபடி அங்கு வந்திருக்கிறார்கள்.    

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  காதல் விவகாரத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பது குறித்து போலீசார் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.