ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை

 
ki

கல்லூரி விட்டு வீடு திரும்பிய மாணவி ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   ரயில் முன் பாய்ந்ததில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் .

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமம்.   இக்கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா என்கிற 19 வயது இளம்பெண் பி. காம் இறுதியாண்டு படித்து வந்திருக்கிறார்.   இவர் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு அங்கிருந்து கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கும் சென்றிருக்கிறார்.  பின்னர் இரவு வீடு திரும்பி இருக்கிறார்.

t

வீடு திரும்பிய கொஞ்ச நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் இருந்த ரயில் நிலையத்திற்கு சென்று திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் முன்பாக பாய்ந்திருக்கிறார்.  இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் கிருத்திகா.  இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,  கிருத்திகா மாமா மகனை காதலித்து வந்திருக்கிறார்.  அவரை திருமணம் செய்து வைக்கச் சொல்லி பெற்றோரிடம் கேட்டிருக்கிறார்.   பெற்றோர் படிப்பு முடியட்டும் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைத்துக் வைக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.   ஆனால் பெற்றோரின் பேச்சில் கிருத்திகாவுக்கு நம்பிக்கை இல்லை.   படிப்பு முடிந்ததும் மாமா மகனுக்கு தன்னை திருமணம் செய்து கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்திருக்கிறார்.  இதனால் மன உளைச்சலில் இருந்த கிருத்திகா ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது.