’Mrs TamilNadu' பட்டம் வென்ற கோவை பெண்

 
mrs tamilnadu

கேரள மாநிலம் கொச்சியில் தனியார் நிறுவனம் நடத்திய திருமணம் ஆனவர்களுக்கான தென்னிந்திய அழகிப் போட்டியில் Mrs Tamilnadu பட்டத்தை கோவையை சேர்ந்த ஷாலுராஜ் வென்றுள்ளார். 

பேகாசஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 20 வருடங்களாக அழகி போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் சார்பில் கேரள மாநிலம் கொச்சியில் மிஸஸ் தென் இந்திய அழகி போட்டி 2023 நடைபெற்றது. இப்போட்டிக்கு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 14 இறுதி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் கோவையை சேர்ந்த ஷாலு ராஜ் என்பவர் மிஸஸ் தென் இந்திய அழகி போட்டியில் இரண்டாவது ரன்னர் அப் இடத்தையும், மிஸஸ் தமிழ்நாடு அழகி பட்டத்தையும் வென்றுள்ளார். இந்த நிகழ்வை யுனிக் டைம்ஸ் மற்றும் டி குயூ  இணைந்து  வழங்கியது. மிஸஸ் தென் இந்திய அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரக்கத்  ஜூவல்லர்ஸ் வடிவமைத்த தங்க கிரீடம் சூட்டப்பட்டது. பன்முக ஆளுமை கொண்ட ஷாலு ராஜ், போட்டியில் Mrs.Diligent, Mrs.Fitness மற்றும் Mrs.Promising Model உட்பட 4 விருதுகளை  பெற்றுள்ளார்.

இது குறித்து ,செய்தியாளர்களிடம் பேசிய ஷாலு ராஜ், “இந்த வெற்றியை தனது குடும்பத்துக்கும், தமிழ்நாட்டிற்கும்  அர்ப்பணிக்கிறேன். மேலும் திருமணம் ஆன பெண்கள் தாய் பால் ஊட்டுவதால் அழகில் எந்த மாற்றமும் ஏற்படாது. தானும் 2 வயது வரை தனது மகனுக்கு தாய் பால் கொடுத்தேன். மேலும் இம்மாதிரியான முன்னெடுப்புகளில் குடும்பத்தினர் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். தான் பயிற்சிக்கு செல்லும் போது கணவர் மகனை நன்றாக கவனித்து கொண்டார், திருமணத்திற்கு பின் பெண்கள் இன்னும் வலுவாகின்றனர்” எனக் கூறினார்.