கோவை பந்த்-க்கு அழைப்பு விடுக்கவில்லை.. - நீதிமன்றத்தில் அண்ணாமலை பல்டி..

 
கோவை பந்த்-க்கு அழைப்பு விடுக்கவில்லை.. - நீதிமன்றத்தில் அண்ணாமலை பல்டி..

கோவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை என  உயர்நீதிமன்றத்தில்  அண்ணாமலை தரப்பு பல்டி அடித்துள்ளது.

கோவை கார் சிலிண்டர் பிரச்சனையை முன்வைத்து, கோவையில் அக்டோபர் 31ம் தேதிமுழு அடைப்பு போராட்டத்துக்கு  பாஜக சார்பில்   அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்த  விசாரணையை என்.ஐ.ஏ. மேற்கொண்டுள்ள நிலையில்,  பந்த்துக்கு அவசியமில்லை என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே வி.ஆர்.வெங்கடேஷ் என்பவர் ,  பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் சட்டவிரோதம் என அறிவிப்பதுடன் தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தார்.

 கோவை கார் சிலிண்டர் விபத்து  : என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு..

அந்த மனுவில், கடைகளை அடைத்து பந்த்துக்கு ஆதரவு தர வேண்டும் என பாஜகவினர்  வியாபாரிகளை கட்டாயப்படுத்துவதாகவும், பந்த் நடத்துவது கோவையின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்  என்றும்  குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு  அழைப்பு விடுக்கவில்லை என அண்ணாமலை தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக  பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பந்த்-க்கு ஆதரவு தெரிவித்த நிலையில்,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை பந்த்-க்கு அழைப்பு விடுக்கவில்லை.. - நீதிமன்றத்தில் அண்ணாமலை பல்டி..

அதன்படி, வரும் 31ம் தேதி கோவையில் முழு அடைப்பு தன தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிக்கவில்லை என அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் பால் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். மேலும்,  முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் என்கிற தனி நபர்தான் என்றும்,  அவரின் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கோவையில் அக்டோபர் 31ல் பந்த் நடத்தினால் காவல்துறை  சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று  கூறி, வழக்கு விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.