கோவை கார் வெடிப்பு: வீடு வீடாக என்.ஐ.ஏ. சோதனை

 
k

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை என்ஐஏவுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் மீண்டும் சோதனை நடந்து வருகிறது. வீடு வீடாக இந்த சோதனை நடந்து வருகிறது.  20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதால் கோவை உக்கடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ko

கோயம்புத்தூரில்  கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அன்று கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.  இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் என்பவர் உயிரிழந்தார்.   விசாரணையில் அவர் பெரும் சதி திட்டத்துடன் செயல்பட்டதும்,  ஐஎஸ் பயங்கரவாதி என்பதும் கண்டறியப்பட்டது.

இதன் பின்னர்  முபினுடன் தொடர்புடைய ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதை அடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.  தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே விசாரணை  சோதனை நடத்தி இருக்கும் நிலையில் மீண்டும் சோதனை தொடங்கி இருக்கிறது.

 கோவை உக்கடம் அடுத்த புல்லுக்காடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் இணைந்து வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள் . 

மாநகர போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாக தகவல் கசிந்துள்ளன.  இந்த சோதனையை முன்னிட்டு அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதால் கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.