பாஜக விவசாய அணியின் கோவை பெருங்கோட்ட ஆய்வுக்கூட்டம்!!

 
ttn

திருப்பூர் பாஜக மாநகர அலுவலகத்தில் கோவை பெருங்கோட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.பெருங்கோட்ட பொறுப்பாளரும்,மாநில செயலாளருமான திரு.மௌன குருசாமி தலைமை தாங்கினார்.பெருங்கோட்ட அமைப்புச்செயலாளர் திரு.பாலகுமாரன் வழிகாட்டினார்.

tn

பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் பேசும்போது, இந்த ஆய்வுக்கூட்டம் அமைப்பு ரீதியானது.விவசாய அணியை கிளை வரை கொண்டு செல்வது,பஞ்சாயத்து மண்டல் நிர்வாகிகளை முழுமையாக நியமிப்பது குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.

ttn

நிர்வாகிகள் நியமனம் பெயரளவில் இருக்கக்கூடாது.நிர்வாகிகள் பாஜகவின் சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் முழுமையாக அறியச்செய்ய வேண்டும்,நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும்,அவர்களை மட்டுமே நிர்வாகிகளாக நியமனம் செய்ய வேண்டும். விவசாய அணியால் தமிழகத்தில் தாமரையை மலரச்செய்ய முடியும்.ஒவ்வொரு நிர்வாகியும் வாக்குவங்கியை உருவாக்கும் அளவிற்கு மக்களோடு தொடர்பு இருக்க வேண்டும்.மக்களோடு தொடர்பு இருப்பதே மகத்தான கட்சிப்பணி என்றார்.