ஆ.ராசாவை விமர்சித்த கோவை பாஜக தலைவர் கைது!

 
tn

 கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

A raja
திமுக துணை பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கடந்த 5ம் தேதி திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்து மதத்தை சேர்ந்தவர்களை  அவதூறாக பேசியதாக தெரிகிறது. இது குறித்து பாஜக தரப்பில் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அத்துடன் பல்வேறு மாவட்டங்களில் ஆ.ராசாவுக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேசமயம் ஆ.ராசாவின் கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். 

arrest

இந்நிலையில்  திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தமராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார் . அண்மையில் பீளமேடு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்  ஆ. ராசாவை மிரட்டும் வகையில் அவர் பேசியிருந்தார். உத்தம ராமசாமி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்