சென்னையில் முக்கிய சுரங்கப்பாதைகள் மூடல் - போக்குவரத்து மாற்றம்

 
ச்

தொடர் கனமழையின் காரணமாக  சென்னை சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் முக்கிய சுரங்க பாதைகள் மூடப்பட்டுள்ளன . போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.   சென்னையின் பல்வேறு பகுதிகள் ஆறுகள்,  குளங்கள் போல் காட்சி அளிக்கின்றன.

ச்ச்ச்

 வியாசர்பாடி  சுரங்கப்பாதை குளம் போல் ஆனதால் அந்த வழியாக சென்ற மாநகர பேருந்து அதில் சிக்கியது.  அந்த பேருந்தில் பயணம் சென்ற 25க்கும் மேற்பட்ட பயணிகள் தீயணைப்பு படையினரின் உதவியுடன் ரப்பர் படகுகள் மேலும் மீட்கப்பட்டனர்.

 இந்த நிலையில் சென்னையில்  வியாசர் பாடி சுரங்கப்பாதையை போலவே ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையும் மழையில்  மூழ்கிவிடும்.  இதனால் அந்த சுரங்கப்பாதையையும் மூடப்பட்டிருக்கிறது.  

 இது குறித்து காவல்துறையை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,   சென்னையில் மழை நீர் அதிகம் தேங்கி இருக்கும் கணேசபுரம், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் இரண்டும் மூடப்பட்டிருக்கின்றன.   சுரங்கப்பாதையில் தேங்கியிருக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளார்கள்.   அதுவரைக்கும் பொதுமக்களின் போக்குவரத்திற்காக மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஹ்

 ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டாது.   ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியே செல்ல அறிவுறுத்தப்படுகிறது. கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா பேசின்பாலம் வழியாகவும்,   வெளியில் இருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை, முரசொலி மாறன் பாலம் வழியாகவும் செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.