மாமல்லபுரம் கடலில் ராட்சத அலையில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

 
beach

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மாமல்லபுரம் கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

College students rescued after drowning in sea reverberates: Mamallapuram  police sends warning to tourists who bathe in sea | கல்லூரி மாணவர்கள் கடலில்  மூழ்கி மீட்கப்பட்ட சம்பவம் எதிரொலி ...

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த அத்திபலே நகரத்தை சேர்ந்தவர்கள் குடும்பம், குடும்பமாக ஒரு பேருந்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு ஆன்மீக யாத்திரை வந்துள்ளனர். அவர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு இன்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். அனைவரும் அங்குள்ள அனைத்து புராதன சின்னங்களையும் சுற்றி பார்த்துவிட்டு இறுதியாக மாமல்லபுரம் கடலில் குளித்தனர். 

இந்நிலையில் அத்திபலே பகுதியை சேர்ந்த சுமிதா(வயது15) என்பவர் தன் பெற்றோர் மற்றும் ஊர்காரர்களுடன் சேர்ந்து கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது கடல் பலத்த சீற்றமாக இருந்தால் ராட்சத அலையில் சிக்கி சுமிதா நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டார். பிறகு தங்கள் கண் முன்னே மகள் கடலில் அடித்து செல்லப்பட்டதை கண்டு அவரது பெற்றோர் மற்றும் சகோதரியும், உறவினர்களும் கதறினர். 

இதுகுறித்து மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  உடனே தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாமல்லபுரம் கடலில் சுமிதா உடலை தேடினர். எங்கு தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. பிறகு ஒரு மணி நேரம் கழித்து காற்று திசை மாறி வீசியதால் அவரது உடல் மாமல்லபுரம் தெற்கு பக்க கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. பிறகு 108 ஆம்புலன்ஸ் குழுவினர் வந்து சுமிதாவின் உடலை பரிசோதனை செய்தனர். அவர் இறந்துவிட்டதை உறுதி செய்த பின்னர், மாமல்லபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இறந்த சுமிதா, அத்திபலே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவி சுமிதா ஆன்மீக யாத்திரைக்கு வந்து இறந்த சம்பவம் கர்நடகா பக்தர்களிடையே கடும் சோத்தை ஏற்படுத்தியுள்ளது.