தேவர் ஜெயந்தி விழாவில் இரு பிரிவு இளைஞர்களுகிடையே மோதல்

 
clash

ஆண்டிபட்டி அருகே தேவர் ஜெயந்தி விழாவில் இரண்டு பிரிவு இளைஞர்களுகிடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே  கானாவிளக்கு  தேவர் சிலை பகுதியில் தேவர் ஜெயந்தி விழா விமரிசியாக  கொண்டாடப்பட்டது. கானாவிளக்கு மற்றும் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த கிராமமக்கள் மாலை முதல் இரவு வரை தனித்தனி பிரிவுகளாக வந்து கானாவிளக்கு தேவர்சிலைக்கு ஆட்டம் பாட்டத்துடன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். உற்சாக மிகுதியில் வந்த ஒரு பிரிவினர்  சாலையில் சென்ற தனியார் பேருந்தை  மறித்து ஆடினார்கள். அப்போது மற்றொரு பிரிவினர் அவர்களை விலக்கி விட முயற்சித்தனர். அப்போது  இரண்டு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.  

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிந்து இருந்த போலீசார் 2 பிரிவினரையும் விலக்கிவிட்டனர். அப்போது இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும்விதமாக உடனடியாக போலீசார்  அனைவரையும் விரட்டி அடித்தனர். இதனால் தேனி மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பின்பு சீரானது. ஆண்டிபட்டி போலீசாரின் துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.