அதிமுக ஈபிஎஸ் அணியினருக்கும் அமமுகவினருக்கும் இடையே மோதல்

 
மோதல்

ஆண்டிப்பட்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் எம்ஜிஆர் சிலை அருகே கொடி கட்டுவதில் அதிமுக எடப்பாடி அணியினருக்கும் அமமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆண்டிப்பட்டி அருகே கண்மாய் ஏலம் எடுப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல்:போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டியில்  மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பல்வேறு தரப்பினரால்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக டிடிவி தினகரனின்  அமமுகவினர் மாலையணிவித்து சென்றபிறகு மாலையணிவிக்க  இரண்டாவதாக வந்த அதிமுக எடப்பாடி அணியினர் எம்ஜிஆர் சிலையருகே கட்டப்பட்டிருந்த அமமுக கட்சிக்கொடியை அகற்றினர். 

இதனால் ஆத்திரமடைந்த அமமுகவினர் நிகழ்விடத்துக்கு வந்து அதிமுக கொடியை அகற்றினர். இதனால் இருதரப்பிற்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியதால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து இருதரப்பு கொடிகளையும் எம்ஜிஆர் சிலையருகே கட்ட ஏற்பாடு செய்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். 

அதுவரை எம்ஜிஆர் சிலையருகே வராமல் சிறிதுதூரம் தள்ளிநின்று  காத்திருந்த ஓபிஎஸ் அணி தேனிமாவட்ட பொறுப்பாளர் சையதுகான் தலைமையிலான ஓபிஎஸ் அணி, அதிமுகவினர் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக கோசங்கள் ஏதும் எழுப்பாமல் எம்ஜிஆர் சிலைக்கு மாலையணிவித்து முடிந்தவுடன் அந்த இடத்தை விட்டு உடனே கலைந்து சென்றனர். ஏற்கனவே பதட்டம் ஏற்பட்டு தணிந்த நிலையில் மீண்டும் பதட்டம் ஏற்படாத வகையில் அமைதியாக மாலையணிவித்துச் சென்ற ஓபிஎஸ் அணியினர் செயல் அனைவரையும் கவர்ந்தது.