ஆளுநர் அரசியல்வாதிபோல் செயல்படுகிறார்- பி.சி.ஸ்ரீராம்

 
sriram

ஆளுநர் ஒரு அரசியல்வாதியாக செயல்பட்டுள்ளார், ஆளுநர் பதவி விலக வேண்டும் என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

P.C. Sreeram biography and information - Cinestaan.com

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியா முழுக்க ஒன்றை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாடு மட்டும் எங்களுக்கு வேண்டாம் என்கிறது. இது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. இந்த மாநிலம் இந்தியாவின் ஓர் அங்கம். தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்” என பேசினார். ஆளுநரின் கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். 


இந்நிலையில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநர் ஒரு அரசியல்வாதியாக செயல்பட்டுள்ளார், ஆளுநர் பதவி விலக வேண்டும். அவரது முதலாளிகளுக்கு இந்த தேர்தலை எப்படியாவது வென்று விட வேண்டும். இந்த தேசத்தின் மீது அர்ப்பணிப்புடன் அவசர நிலையை எதிர்த்து போராடினோம், இப்போதைய போராட்டம் என்பது பிரிவினைவாதத்திற்கும் வெறுப்பு பேச்சிற்க்கும் எதிராக நாம் புரிய வேண்டிய ஒன்று. ஆளுநரின் வார்த்தைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டுள்ளதால் ஆளுநர் அவர்கள் பதவி விலக வேண்டும்! நம்முடைய தேசப்பற்றை வரலாறு அறியும்., ஒவ்வொரு இந்தியனும் அவனுடைய தாய்மொழி மீது அன்பு கொண்டவர்கள், இப்போது உங்கள் வார்த்தைகளால் அவமதிக்கப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.