காதல் தோல்வி- சினிமா உதவி ஒளிப்பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை

 
cameraman

மாங்காடு அருகே காதல் தோல்வியால் சினிமா துறை உதவி ஒளிப்பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விக்னேஷ்(22), சினிமா துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஒரு மாதமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தவர் நேற்று இரவு வீட்டின் அறைக்குள் சென்றவர் வெளியே வரவில்லை அவரது உறவினர்கள் உள்ளே சென்று பார்த்த போது விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர். இது குறித்த மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சினிமா துறையில் உதவி கேமராமானாக பணிபுரிந்து வந்த விக்னேஷ் கடந்த சில மாதங்களாக காதல் தோல்வியால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோனத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.