வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் - முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

 
tn

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த 74வது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றினார். தமிழ்நாடு ஆளுநர் ரவி கொடியேற்றப்படும்போது ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பூ துவக்கப்பட்டது. தேசிய கொடியை இயற்றிய தமிழ்நாடு ஆளுநர் முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

tn

இந்நிலையில் குடியரசு தின விழாவில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருதை மூன்று காவல் நிலையங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் 

சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது

முதல் பரிசு -  திருப்பூர் வடக்கு காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்

இரண்டாம் பரிசு - கோட்டை காவல் நிலையம், திருச்சி மாநகரம்

மூன்றாம் பரிசு - திண்டுக்கல் வட்ட காவல் நிலையம், திண்டுக்கல் மாவட்டம்

tn


அத்துடன் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் மற்றும் காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்பித்தார். சென்னை தலைமை காவலர் சரவணன், செவிலியர் ஜெயக்குமார், தஞ்சை செல்வம் ,தூத்துக்குடி அந்தோணிசாமி, கன்னியாகுமரி ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.