அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை

 
s

 வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு .க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 

 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கி இருக்கிறது.  இன்று முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

r

நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்து வருவதால் தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை மழை பெய்து வருகிறது.   இந்த நிலையில் பருவ மழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார் . சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று காலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.