"இந்திய ஒற்றுமை பயணத்தின்" தொடக்க விழாவில் பங்கேற்க புறப்பட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்

 
ttn

இந்திய ஒற்றுமை பயணத்தின் தொடக்க விழாவில் பங்கேற்க புறப்பட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

mk stalin

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணத்தை கன்னியாகுமரியில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  இதற்காக இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக  கன்னியாகுமரிக்கு செல்கிறார். திருநெல்வேலி சென்று அங்கு இரவு தங்கும் ஸ்டாலின், நாளை திருநெல்வேலி ஹைகிரவுண்டு பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கே இருக்கிறார்.  இதையடுத்து விருதுநகர் சென்று திமுக முப்பெரும் விழா நடைபெறும் இடத்தை பார்வையிடும் அவர், பின்னர் மதுரைக்கு செல்கிறார்.  மதுரையில் இரவு தங்கும் முதல்வர் ஸ்டாலின் 9ம் தேதி காலை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று , பின்னர் தமுக்கம் மைதானத்தில் அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். கலைஞர்  நூலகத்தை பார்வையிடும் அவர் 9ம் தேதி இரவு சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

mk Stalin biopic

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பயணம் காரணமாக குமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திருவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.