கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு..

 
stalin

மதுரை மாவட்டம் கால்வாயில்  மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுரை, காமராஜபுரம், பாரதியார் தெருவைச் சேர்ந்த திருமதி.யோ.முத்துலட்சுமி அவர்களின் கணவர் திரு.யோகேஸ்வரன் கடந்த 13.11.2022 அன்று அழகர்கோவில் சாலை கள்ளந்திரியில் உள்ள முல்லைப் பெரியாறு கால்வாயில் எதிர்பாராதவிதமாக மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு வருத்தமுற்றேன்.

கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு..

 உயிரிழந்த திரு.யோகேஸ்வரன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் இரங்கலையும், ஆறுதல்களையும் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண  நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.