கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

 
tnn

எம்.பி கனிமொழிக்கு  முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
 

tn

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளான கனிமொழி இன்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகிக்கும் இவர் வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.  இதழியல் இலக்கிய துறைகளில்  அதிக ஆர்வம் கொண்ட  கனிமொழி  தி இந்து நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு , குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை சங்கமம் எனும் கலை பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார்.
 

kanimozhi

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.  கனிமொழி தனது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்த நிகழ்வின் போது நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி ,மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ,  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.