தமிழணங்கு ஓவியத்தை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்!

 
as

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழணங்கு ஓவியத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ’’எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே’’ என்று பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

sa

 தமிழணங்கு என்று இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பகிர்ந்த அந்த தமிழ்த்தாயின் ஓவியம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது.  ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்திருந்த அந்த ஓவியத்தில் தமிழ் தாய் கருப்பு நிறத்தில் தலைவிரி கோலமாக உக்கிரதோடு இருப்பது போல காலில் சிலம்பு அணிந்து கையில் ழ என்கிற எழுத்தை தாங்கி வேலோடு இருப்பதாகவும் வரையப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வந்தது.

 இந்த நிலையில் இந்த ஓவியத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.   அத்துடன் வாடிகன் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டுவிட்டரில் வீடியோவுடன் பதிவிட்டிருந்ததையும் முதல்வர் மு. க. ஸ்டாலின் பகிர்ந்திருக்கிறார்.