ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணம் - தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

 
 ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணம்  -  தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..


ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணத்தை கன்னியாகுமரியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி தொடங்கி வைத்துள்ளார்.  

tn

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமைக்கான பயணம் ’ என்ற பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.   காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை கட்சி தலைமை செய்து வருகிறது.  அதன் ஒரு பகுதியாக் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து இன்று இந்த பயணத்தை தொடங்குகிறார். நாடு முழுவதும் 12 மாநிலங்கள் வழியாக  150 நாட்கள் 3, 570 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார். 

 ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணம்  -  தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

இதற்கான நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ,  சத்தீஸ்கர் முதல்வர் ஆகிய 3 மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர்  பங்கேற்றுள்ளனர். முன்னதாக   பூம்புகார் படகுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலையை அவர்  பார்வையிட்டார். பின்னர் இசையஞ்சலி செலுத்தப்பட்டு, கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பிருந்து பாதயாத்திரை தொடங்கியிருக்கிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி ராகுல் காந்தியின் நடைபயணத்தை  தொடங்கி வைத்தார். முன்னதாக இன்று காலை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில்  மலர் தூவி, அஞ்சலி செலுத்திய  ராகுல் அங்கு மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.