#JustIn கொரோனாவிலிருந்து மீண்ட முதல்வர் ஸ்டாலின் - நாளை டிஸ்சார்ஜ் !!

 
tn

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

mk Stalin biopic

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  கடந்த சில தினங்களுக்கு  முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு இருந்ததன் காரணமாக அவர் கடந்த 14ஆம் தேதி  சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   கொரோனா அறிகுறியினால் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.அத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. தற்போது  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருகிறார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர், அங்கேயே தங்கி ஓய்வு பெற்று வந்தார்.

tn

இந்நிலையில் சென்னை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தார். நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.  ஒரு வாரம் முழ்மையான ஓய்வில் இருக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.