கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்..

 
கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்.. 


திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி இன்று  90வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இதனையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

திராவிட கழக தலைவர் கீ.  வீரமணியின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு,  அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வா. வேலு,  பொன்முடி ஆகியோரும் உடனிருந்தனர்.  அத்துடன் திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியின் போது உடன் இருந்தனர். அப்போது முதல்வர்  கி. வீரமணிக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை முதல் வர் தெரிவித்தார்.  

கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்.. 

முன்னதாக தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர், “ திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என்ற பேரறிஞர் அண்ணாவின் புகழுரைக்கு ஏற்ப 10 வயது முதல் தந்தை பெரியாரின் லட்சியத்தை முழங்கத் தொடங்கி,  தொண்டராக தொடர்ந்து மேற்கொண்டு இளையோர்க்கு இணையாக , சமூக நீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி,  பகுத்தறிவு இனமான உணர்வினை ஊட்டி வரும் தாய்க்கழகமாம் திராவிட கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் ஐயா அவர்களுக்கு அகவை 90 என்பதில் அகம் மிகமகிழ்கிறேன்
 
திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய் – வழிகாட்டியாய் அவர்கள் நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.’என்று குறிப்பிட்டிருந்தார்.