இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

 
ttn

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

ttn

தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா சமீப காலமாக திரைப்படங்கள் இயக்குவதை நிறுத்திய அவர்,  குணச்சித்திர பீடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.   அண்மையில் இவர் நடிகர் தனுஷ் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார்.  சமீபத்தில் விமான நிலையத்தில் மயங்கி விழுந்த பாரதிராஜா,  சென்னை திநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்த கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  நீர்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக பாரதிராஜா பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது.  கடந்த சில தினங்களாக பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

ttn

இந்நிலையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்து அண்மையில் வீடு திரும்பிய இயக்குநர் பாரதிராஜாவை அவரது வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இயக்குநர் பாரதிராஜா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த நிலையில் தற்போது நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் கவிஞர் வைரமுத்து  , அமைச்சர்கள் உடனிருந்தனர்.