காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

 
tn

பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் 

tn

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார். ரூ.33.56 கோடியில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.  மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவை மாணவர்களுக்கு ஊட்டி விட்டு அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் முதல்வர் . 

tn

1 முதல் ஐந்தாம் வகுப்பு வரைவிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்களில் காலை உணவு வழங்கப்படுகிறது.  மதுரை தவிர பிற மாவட்டங்களில் காலை உணவு திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது . மாணவர்கள் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்ததை கேட்டறிந்த முதல்வர் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.  பள்ளி செல்லும் மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் இருப்பதை நிறுத்தவே முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

tn

அந்த வகையில் 1545 அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. திங்களன்று அரிசி, ரவை ,சேமியா, கோதுமை ரவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உப்புமா, காய்கறி சாம்பார் , செவ்வாய் தோறும் ரவை, சேமியா, சோளம் ,கோதுமை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் காய்கறி கிச்சடி செய்து தரப்படும்.

tn

 புதன் தோறும் மாணவர்களுக்கு வெண்பொங்கல் அல்லது ரவை பொங்கல்,  காய்கறி சாம்பார் வழங்கப்பட உள்ளது.  வியாழக்கிழமைகளில் அரிசி, ரவை, சேமியா, கோதுமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உப்புமா,  காய்கறி சாம்பார் தரப்படும். வெள்ளிக்கிழமைகளில் ரவை ,சோளம், கோதுமை ,ரவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கிச்சடி, ரவை கேசரி, சேமியா கேசரி ஆகியவை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.