சிறார் குற்றங்களுக்கு தீர்வு காணும் "சிற்பி" திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்!!

 
tn

சென்னை கலைவாணர் அரங்கில்  சிறார் குற்றங்களுக்கு தீர்வு காணும் "சிற்பி" துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

tn

சென்னையில் பெருகிவரும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாநகர காவல் துறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணும் வகையிலும் , பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை கண்டறிந்த அவர்களை வழிகாட்டவும்,  சென்னையில் 100  மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு சிற்பி என்னும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

stalin

இந்நிலையில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.  சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையின் 100 மாநகராட்சி பள்ளிகளில் ‘சிற்பி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  பள்ளிகளில் என்சிசி போன்று காவல்துறையினரின் நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் சிற்பி திட்டம் செயல்பட உள்ளது. எட்டாம் வகுப்பு முதல் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு என தனி சீருடை வழங்கப்பட உள்ளது.