நாஞ்சில் சம்பத் உடல்நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்..

 
stalin


உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியின் வாயிலாக கேட்டறிந்தார்.   


திராவிட இயக்க பேச்சாளராக இருந்து வருபவர் நாஞ்சில் சம்பத். நரம்பியல் ரீதியான பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்  நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், உடல்நலக்குறைவால்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாஞ்சில் சம்பத் உடல்நலம் குறித்து அவரது மகன் மருத்துவர் சரத் பாஸ்கரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

நாஞ்சில் சம்பத் உடல்நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்..

இது தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு: “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.1.2023) உடல்நலக்குறைவால் கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் சம்பத் உடல்நலம் குறித்து அவரது மகன் மருத்துவர் சரத் பாஸ்கரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர். மகேஷ் ஆகியோரை தொடர்புகொண்டு, நாஞ்சில் சம்பத்துக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.