எரிசக்தி துறை சார்பில் கட்டப்பட்ட துணை மின் நிலையங்கள் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

 
எரிசக்தி துறை சார்பில் கட்டப்பட்ட துணை மின் நிலையங்கள் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

 எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில்,  அமைக்கப்படவுள்ள  துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பபில், “ எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில்,    ஈரோடு மாவட்டம் - ஈரோட்டில் ரூ. 80.26 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230 கி.வோ தரம்  உயர்த்தப்பட்ட துணை  மின் நிலையம் (Gas Insulated Substation); திருவள்ளூர் மாவட்டம் - பாப்பரம்பாக்கம் சிட்கோ செம்பரம்பாக்கம் மற்றும் வேலூர் மாவட்டம் - மேல்பாடி  ஆகிய இடங்களில் ரூ. 46.71 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று புதிய 110  கி.வோ துணை மின் நிலையங்கள்; செங்கல்பட்டு மாவட்டம் - அனகாபுத்தூர்; சென்னை மாவட்டம் - மில்லர்ஸ் சாலை, கண்ணம்மா பேட்டை (எம்.ஆர்.சாலை), கார்ப்பரேஷன் காலனி, வடபழனி, தாமோதரன் தெரு, கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ.  219.29  கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஏழு 33 கி.வோ துணை  மின் நிலையங்கள் (Gas Insulated Substation);

மின்சாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் - விளாகம்;  திருவள்ளுர் மாவட்டம் - பொன்னியம்மன் நகர் மற்றும் வேலூர் மாவட்டம் -  மடையப்பட்டு ஆகிய இடங்களில் 26 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 33 கி.வோ துணை  மின் நிலையங்கள்; என மொத்தம் 373 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று திறந்து வைத்தார்.

மேலும், செங்கல்பட்டு , சென்னை , கோயம்புத்தூர் , கடலூர் , தர்மபுரி , திண்டுக்கல் , ஈரோடு , கள்ளக்குறிச்சி , காஞ்சிபுரம்  , கன்னியாகுமரி , கிருஷ்ணகிரி,  மதுரை , மயிலாடுதுறை , நீலகிரி , பெரம்பலூர் ,புதுக்கோட்டை என தமிழகம் முழுவதும்  பல்வேறு மாவட்டங்களில்  57 இடங்களில் உள்ள 57  துணை மின் நிலையங்களில் 723 எம்.வி.ஏ அளவிற்கு திறன் அதிகரிக்கும்  பொருட்டு  91 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில்  நிறுவப்பட்டுள்ள 57 மின் மாற்றிகளின் திறன் உயர்த்தி, அதன் செயல்பாட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

எரிசக்தி துறை சார்பில் கட்டப்பட்ட துணை மின் நிலையங்கள் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

மேலும், கடலூர் மாவட்டம் - நெல்லித்தோப்பு; கரூர் மாவட்டம் - ஒத்தக்கடை (தரம் உயர்த்துதல்) தென்னிலை, சின்ன பனையூர், பவித்திரம்; அரியலூர் மாவட்டம் - திருமழபாடி; தஞ்சாவூர் மாவட்டம் - அதிராம்பட்டினம், திருநாகேஸ்வரம் ஆகிய இடங்களில், 130 கோடியே 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள 8 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.