ஊராட்சி கட்டிடங்கள், ஊரக வளர்ச்சித்துறைக்கு வாகனங்கள் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

 
 ஊராட்சி கட்டிடங்கள், ஊரக வளர்ச்சித்துறைக்கு வாகனங்கள் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. 


ஊரக வளர்ச்சித்துறையின் பயன்பாட்டிற்கான வாகனங்கள் மற்றும் கட்டிடங்களின்  சேவையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை திறம்பட கண்காணிக்க ஏதுவாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுக்கு பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் 2021 - 22 ஆம் ஆண்டிற்கான மானியக்  கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.  அதன்படி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல்,  ஈரோடு, கள்ளக்குறிச்சி,  காஞ்சிபுரம்,  கன்னியாகுமரி,  கரூர்,  கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர்,  புதுக்கோட்டை,  ராணிப்பேட்டை,  சேலம், தென்காசி,  தஞ்சாவூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் செயற்பொறியாளர், , உதவி செயற்பொறியாளர்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்,  உதவி இயக்குனர்,  உதவி திட்ட அலுவலர்,  வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரின் அலுவலக பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்கப்படுகின்றன.  

 ஊராட்சி கட்டிடங்கள், ஊரக வளர்ச்சித்துறைக்கு வாகனங்கள் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. 

அந்தவகையில்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 6 கோடி 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான  81 பொலிரோ வாகனங்களை வழங்கிடும் வகையில்,  சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வாகனங்களை கொடியசைத்து தொடக்கி  வைத்தார். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் திருவள்ளூர், சேலம், கள்ளக்குறிச்சி,  தூத்துக்குடி,  நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 24.7 ஒரு கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த  ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி ஊராட்சி அலுவலகங்களாக  ஆகியவற்றையும் முதலமைச்சர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.